மிரட்டலாக வெளியானது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் போஸ்டர்.! செல்வராகவன் சார் இந்த போஸ்டர் காப்பி தானே என கேள்வி கேட்கும் ரசிகர்கள்.!

0
ayirathil-oruvan

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் ஒரே மாதிரியான திரைக்கதையை இயக்கி வருகிறார், அந்த வகையில் தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு கொண்டு சென்றவர் செல்வராகவன், இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.

காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி என்ஜிகே வரையில் தொடர்ந்தது இந்த நிலையில் புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுத்தார்.

இந்த நிலையில்  2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் செய்தியை கொடுத்துள்ளார்,  அதாவது அவர் பகிர்ந்ததாவது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த செய்தி தான்.  அந்த வகையில் தம்பி தனுஷ் அவர்களுடன் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் கற்பனைக்கு ஈடு இணை இல்லை அந்த அளவு படத்தை வித்தியாசமாக கொண்டு செல்வார் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய திரைப்படங்களை அதற்கு உதாரணமாகக் கூறலாம். அதே போல் செல்வராகவன் தமிழ் படத்தில் உள்ள அனைத்து வசனங்களையும் ராவாக கொடுத்து ரசிகர்களை ரசனையோடு அணுகுவார்.

இந்த நிலையில் ஒரு திரைப்படம் திரைக்கு வந்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பலமுறை திரையரங்கில் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள். முதல் பாகத்தில் கார்த்தி ரீமா சென் ஆண்ட்ரியா பார்த்திபன் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

மேலும் முதல் பாகத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே உரிமைக்கான போர் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக சித்தரித்து செல்வராகவன் இயக்கி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார் செல்வராகவன்.

இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வெளியாகும் என செல்வராகவன் கூறியுள்ளார்.  மேலும் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியிருந்தார் ஆனால் இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்  அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் தூதுவனாக நடித்த கார்த்தி நடிக்கிறாரா இல்லையா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.  மேலும் கார்த்தி மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடித்தால் படம் பிரமாண்டமாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

இதோ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் போஸ்டர்.

aayirathil-oruvan
aayirathil-oruvan

அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான ஃபேன் மேட் போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கியுள்ளார்கள் அந்த புகைப்படங்கள்.

மேலும் செல்வராகவன் வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் போஸ்டர் காப்பி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள், ஏனென்றால் ஓவிய கலைஞர் மேத்யூ லாப்ரே என்ற ஆர்ட் புத்தகத்திலிருந்து அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டது என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.  இந்த தகவல் படக்குழுவினருக்கு சற்று சங்கடத்தை கொடுத்துள்ளது.

aayirathil-oruvan-2-copied
aayirathil-oruvan-2-copied