அயன் திரைப்படத்தில் சூர்யா போட்ட லேடி கெட்டப் எந்த நடிகையோடது தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!

ayan suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவர் நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார், சூர்யா சினிமாவில் அடியெடுத்து வைத்த போது பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார் அதையெல்லாம் கடும் மன உறுதியுடன் எதிர்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ளார், அதற்கு காரணம் சூர்யாவின் கதை தேர்வு மற்றும் கடின உழைப்பு தான்.

மணிரத்தினத்தின் தயாரிப்பில் வசந்த இயக்கிய ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் அதன் பின்னர் காதலேநிம்மதி, பெரியண்ணா, சந்திப்போமா, பூவெல்லாம் கேட்டுப்பார் என பல படங்களில் நடித்திருந்தாலும் 2001 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய பிரண்ட்ஸ் நந்தா ஆகிய திரைப்படங்கள் தான் சூர்யாவின் திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படம் சூர்யாவின் திரைப் பயணத்தை அப்படியே திருப்பி போட்டது, இந்த திரைப்படத்தில் சிக்ஸ்பேக் வைத்து தமிழ் சினிமாவையே வாய் பிளக்க வைத்தார், அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இந்த திரைப்படத்தில் தோற்றமளித்தார்.

தற்பொழுது சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துவருகிறார், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கு நடிகர் மோகன்பாபு,கருணாஸ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் சூர்யா ஹரி இயக்கத்தில் ஆறாவது முறையாக கூட்டணி அமைத்து அருவா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் சூர்யா 2009 ஆம் ஆண்டு அயன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல் ஆன ‘பளபளக்குற பகலா நீ’ என்ற பாடலில் சூர்யா பல கெட்டப்களில் வருவார் அதில் பெண் வேடமிட்டு சூர்யா வருவார் இந்த சீன் அந்த பாடளில் மிகவும் பிரபலம்.

sivaji-tamil360newz
sivaji-tamil360newz

இந்த சீனில் சூரியா போட்டு நடித்திருக்கும் ரெட் கலர் கவுனை ஏற்கனவே ஸ்ரேயா அணிந்து நடித்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சிவாஜி திரைப்படத்தில் ‘ஒரு கூடை சன்லைட்’ என்ற பாடலில் ஸ்ரேயா இதே மாதிரி ரெட் கலர் உடையில் ஆட்டம் போட்டு இருப்பார் இந்த இரண்டு படங்களையும் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக ஷர் செய்து வருகிறார்கள்.

sivaji-tamil360newz
sivaji-tamil360newz

Leave a Comment