அயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள்.! வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.?

0

அயன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக ரீ – கிரியேட் செய்த சிறுவர்களை நடிகர் சூர்யா வாழ்த்தியுள்ளார். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் கேவி ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார்  இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருப்பார்.

அயன் திரைப்படம் வெளியாகியது ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதேபோல் இந்த திரைப்படத்தில் பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி சமூகவலைதளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதனை முன்னிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக  அயன் படத்தின் சில காட்சிகளை ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்த சூர்யா ரசிகர்கள் முதன் முறையாக பயிற்சி எதுவும் எடுக்காமல் யூடியூப் பார்த்து கற்றுக் கொண்டு செல்போனில் வீடியோ எடுத்து அதன் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை ரீமிக்ஸ் செய்து உள்ளார்கள் இந்த வீடியோ பல மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தநிலையில் அயன் திரைப்படத்தின் முதல் பாடலை அச்சு அசல் அப்படியே மீண்டும் எடுத்துள்ளார்கள்.

இந்த வீடியோவும் ரசிகர்களிடம் வைரலானது மட்டுமல்லாமல் சூர்யாவும் இந்த வீடியோவை பார்த்துள்ளார் இதை பார்த்து சூர்யா மனதார பாராட்டி உள்ளார் என்ற தகவல் சூரியா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.!