எப்படா திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அயலான் ரிலீஸ் தேதியில் மாற்றமா.? கடுப்பில் ரசிகர்கள்

Ayalaan : நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகர்,  பாடகர்,  பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர்.  இவர் தன் நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் மெரினா திரைப்படத்தில் நடித்தது மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் அனைத்தும் வெற்றியடைந்த படமாகவே இருக்கும்.  அந்த வகையில் மெரினா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை அள்ளிக் குவித்தது.

அந்த வகையில் இயக்குனர்  ஆர். ரவிக்குமார் இயக்கத்தில்              ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் “அயலான்”. இப்படத்தினை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர்,இஷா கோபிகர், பானுப்பிரியா, யோகி பாபு,  கருணாகரன் மற்றும் பாலா சரவணன் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.

“அயலான்” திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்று இப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. சயின்ஸ் பிக்ஷன் காமெடியில் உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நிலையில்  இந்த படம் எப்பொழுது திரைக்கு வரும் என்ற ரசிகர்களால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு  இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்  என்றும் அதற்குண்டான டீசரை படக்குழுவினரால்தயார் செய்து வருவதாகவும்  தகவல் வெளியானது. இந்நிலையில்  அயலான் திரைப்பட பணி முழுமையாக முடியவில்லை என்றும் தற்போது இந்த திரைப்படம் 2024 பொங்கல் அன்று வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.