இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட்.. அயலன் படம் குறித்து வெளியான விமர்சனம்..

ayalaan : கடந்த ஐந்து வருடங்களாக அயலான் திரைப்படம் கிடப்பில் கிடந்தது அதற்கு பல காரணங்களை கூறி வந்தார்கள் கிட்டத்தட்ட தற்பொழுது தான் அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஏலியன் பற்றிய கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பாலா சரவணன், என முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்தை ஆர் ரவிக்குமார் தான் இயக்கி உள்ளார் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார் இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளது.

ஏலியனை வைத்து பூமியில் இருக்கும் விவசாயத்தை அழிக்க வில்லன் திட்டமிடுகிறார் அந்த ஏலியன் வில்லன்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனை எதிர்க்கிறது அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை எப்படி ஏலியன் சிவகார்த்திகேயனுடன் இணைந்தது என்பது மிகவும் காமெடியாக சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார்கள் படத்தை.

ஏலியன் பற்றி கதை என்பதால் வி எஃப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் படத்தை பற்றி டிஓபி நிரவ் ஷா போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது. அயலான் திரைப்படத்தின் வி எப் எக்ஸ் காட்சி இதுவரை வந்த திரைப்படங்களிலேயே இந்தியாவில் இதுதான் பெஸ்ட் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்,

அதாவது நான் பார்த்ததில் இதுதான் பெஸ்ட் என்பது போல் கூறியுள்ளார் இந்த பதிவு இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.