என் ரசிகர்கள் என்னை கைவிட மாட்டார்கள் நிரூபித்த சிவகார்த்திகேயன்.! அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா..?

ayalaan movie : 2024 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழில் நான்கு திரைப்படங்கள் மோதிக் கொண்டு இருக்கின்றன அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய கேப்டன் மில்லர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் ஒன், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் என நான்கு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் நான்கு திரைப்படமும் ஓரளவு நல்ல விமர்சனங்களை ரசிகர் மத்தியில் பெற்று வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் தான் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன் தினம் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் திரைப்படம் நூறு கோடி வசூலில் இணைந்ததால் அணுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரிண்ட்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்திருந்தார் சிவகார்த்திகேயன் ஆனால் அவர் நம்பிக்கை தவிடு பொடியாகும்படி பிரின்ஸ் திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரிதளவு கவரவில்லை அதனால் படுதோல்வி அடைந்தது. திரையரங்கில் இருந்து ஒரு வாரத்திலேயே படத்தை தூக்கி விட்டார்கள்.

இந்த நிலையில் பிரின்ஸ் கொடுத்த அடியை எப்படியாவது திருப்பி கொடுக்க வேண்டும் என மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வெற்றி பெற்றது ஆனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் இன் பொழுது இந்த முறை மிஸ் ஆகாது என பேட்டியில் பேசியிருந்தார் அதேபோல் ஹிட் அடித்தது.

சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு கிடப்பிலிருந்து பல தடுமாற்றங்களுக்குப் பிறகு அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வி எப் எக்ஸ் வேலைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை ஒன் லைன் கொண்டு படத்தை உருவாக்கப்பட்டுள்ளது.

ஏலியன் ஜானரில் படம் உருவாகி இருப்பதால் கண்டிப்பாக குழந்தைகளை கவர்ந்து விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் மக்கள் மத்தியில் டீசண்டான வரவேற்பை கொடுத்து இருக்கிறார் கிராபிக்ஸ் பணிகள் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் கதை சாதாரண கதை தான் என்றாலும் ஏலியனை தன்னுடைய ஸ்கிரீனில் கொண்டு வந்து ரவிக்குமார் காப்பாற்றி விட்டார் என ரசிகர் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் அயலான்  திரைப்படம் இரண்டாவது நாள் வசூல் விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது  அதன்படி இரண்டாவது நாளில் அயலான் திரைப்படம் 4.51 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது முன்னதாக இந்த திரைப்படம் முதல் நாளில் ஐந்து கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் கிடைத்த நிலையில் இரண்டாவது நாள் வசூல் கொஞ்சம் டல் அடித்துள்ளது. ஆனால் இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது ஆக மொத்தம் இரண்டு நாளில் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.