புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து வெளியான அசத்தல் அப்டேட்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், சுனில், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகிய நிலையில் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியதால் விரைவில் புஷ்பா 2 திரைப்படம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது பிரம்மாண்ட வெற்றி என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு வெற்றி பெற்ற நிலையில் இதே பாடல் போல இரண்டாவது பாகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது இதனை தொடர்ந்து அந்தப் பாடலுக்கு ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் விஜய் பட நடிகை ஒருவர் அந்த பாடலுக்கு நடனமாட முன் வந்ததாக கூறப்பட்டது இப்படி சிறிய சிறிய தகவல்கள் மட்டும் வந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வேற எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமான புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது அதாவது வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version