வனிதாவுக்கு பட வாய்ப்பை கொடுத்து அசத்தும் பிரபல இயக்குனர்.! ஹீரோ, ஹீரோயினை விட செல்லத்துக்கு தான் முக்கிய ரோல்லாம்.

சினிமாவிற்கு வாரிசு நடிகையாக நடிக்க ஆரம்பித்த பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக விலகுவார்கள் அவர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளாவார் சினிமாவிற்கு அறிமுகமான பிறகு இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார்.

அதன் பிறகே தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மத்தியிலும் சர்ச்சை நடிகையாக பிரபலமடைந்தார்.

அதன் பிறகும் தொடர்ந்து விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராக பங்கு பெற்று வந்த இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

சர்ச்சை நடிகையாக இவர் பிரபலமடைந்து இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். சமீபத்தில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் திரைப்படத்திலும்,பவர் ஸ்டாருக்கு ஜோடியாக ஒரு திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் ஒரு திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ஆம், தமிழில் பிரபல இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகிவரும் ஒரு திரைப்படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த துஸ்ரா விஜயன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர்கள் நடிக்க உள்ள திரைப்படத்தின் தான் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment