வித்தியாசமான படங்களில் நடித்து அசத்தும் அருள்நிதி – குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

0
arul-nithi-
arul-nithi-

திரை உலகில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் எப்பொழுதும் வித்தியாசமான திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடித்து அசத்துவது உண்டு அதன் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க முடியும் என நடிகர்கள் நம்பி கடினமாக உழைத்து நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து அசத்தி உள்ளவர் நடிகர் அருள்நிதி.  ஆம் இவர் இதுவரை காதல், சென்டிமென்ட், திரில்லர் மற்றும் ஆக்சன் போன்ற பல்வேறு விதமான படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மௌனகுரு,ஆறாது சினம், களத்தில் சந்திப்போம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட இவரது கையில் டைரி, தேஜாவு  ஆகிய படங்கள் இருக்கின்றன இந்தப் படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவு எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக  அருள்நிதி இருக்கிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக என்ற பெயரைப் பெறவில்லை என்றாலும் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் தொர்டந்து தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அருள்நிதியின் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் அருள்நிதியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடிஎன தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் அருள்நிதியின் சொத்து மதிப்பு இவ்வளவு என்பது ஓகே தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.