Brics film festival விழாவில் தனுஷ் படத்திற்கு விருது.! எந்த படம் தெரியுமா.? புகைப்படத்தை வெளியிட்ட ரஜினியின் மருமகன்.

சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளனர் அந்த வகையில் ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் சந்திக்காத பிரச்சினையே கிடையாது அந்த அளவிற்கு அசிங்கப்பட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷை பார்த்து ரசிகர்கள் இவரைப் பார்த்தால் நடிகர் போல தெரியவில்லை ஒரு ஆட்டோக்காரர் போல இருக்கிறார் என கூறி அப்போது கிண்டலடித்தனர் இதற்காக மனம் உடைந்து போனார் என்பதை அவரே சொல்லியிருக்கிறார் இப்படி ஆரம்ப காலகட்டத்தில் தனுஷ் சந்தித்த அவமானங்கள் அதிகம்.

மேலும் இவரது படங்களை தாறுமாறாக விமர்சித்து உள்ளனர். இருப்பினும் தனது திறமையை படிப்படியாக வளர்த்து கொண்டு அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் மேலும் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். தனுஷ் சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப பெற்றது.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷ் கேரியரில் ஒரு மிகப்பெரிய படமாக அமைந்துள்ளது. இதில் அவரது நடிப்பு வேற லெவலில் இருப்பதோடு மட்டுமல்லாமல் செம்ம வசூல் வேட்டையை நடத்தி அதிக நாட்கள் ஓடிய படம் அசுரன் இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் தற்போது பல்வேறு விருதுகளை அள்ளி குவித்த வண்ணமே இருக்கின்றன இப்பொழுதுகூட இன்டர்நேஷனல் அளவில் ஒரு விருதை கைபற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. Brics film festival விருது விழாவில் அசுரன் படத்திற்கு விருது கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தனுஷ் அறிவித்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Leave a Comment