நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரை உலகநாயகன் கமலஹாசன் என்று தான் அழைப்பார்கள் ஏனென்றால் இவர் படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களை இவர் எப்படி என்று கூறிவிடும்.
1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் அவ்வை சண்முகி படத்தில் கமலஹாசனுடன் இணைந்து மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லிகணேஷ், ஹீரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
இந்த அவ்வை சண்முகி திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிஸஸ் டவுட் ஃபயர் என்ற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்தநிலையில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவாஜிகணேசன் தான் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாஜி நடித்த இருந்தால் இன்னும் சிறப்பாக படமாக அமைந்திருக்கும் என கூறுகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் ஜெமினி கணேசன் சிறப்பாக நடித்துள்ளார் என வாக்குவாதம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தார் தற்போது விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது, அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலில் சிவாஜி அய்யா தான் மீனாவின் தந்தையாக நடிக்க இருந்தார்🤗
~ அவ்வை சண்முகி pic.twitter.com/xw1ygG88jd— சினிமாபுரம்💜 (@cinemapuram) March 20, 2020