ரஜினி நடித்த பிரமாண்ட படத்தை பாதிலேயே கைவிட்ட AVM நிறுவனம் – இயக்குனர் இத்தனை கேட்டது தப்பு.? என்னனு தெரியுமா.?

சினிமா உலகில் நடிகர், நடிகைகளை வளர்த்து விடுவது இயக்குனர்கள் தான் அந்த வகையில் 80,90 காலகட்டங்களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் ஆர் வி உதயகுமார் 1988ஆம் ஆண்டு பிரபு மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாகி உரிமை கீதம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக கால் தடம் பதித்தார்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த டாப் ஹீரோக்களை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் விஜயகாந்தை வைத்து சின்னகவுண்டர், கமல் – சிங்காரவேலன், பொன்மணி, ரஜினி – எஜமான், ராஜகுமாரன் போன்ற நடிகர்களை வைத்து எடுத்து வெற்றி கண்டார். சினிமா உலகில் சிறந்த படைப்புகளை கொடுத்து வந்த இவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் அப்போ உருவாக்கியது.

இயக்குனர் ஆர் வி உதயகுமாருக்கு கோபம் ரொம்ப அதிகம் வருமாம் ஏன் ஒரு பேட்டியில் அவரே சொல்லி உள்ளது என்னவென்றால் நான் பொன்னுமணி படத்தை எடுத்து வந்து இருந்தேன் அப்போது ஷூட்டிங்கில் சௌந்தர்யாவை நான் நடிக்க சொன்னேன் அவர் சரியாக நடக்காமல் 11 டேக்குகள் வாங்கினார் ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் வந்து அவரை அடித்து விட்டேன் அவரும் கீழே விழுந்து விட்டார்.

அவரின் கன்னம் வீங்கி விட்டது இதை யாரோ மறைமுகமாக ரஜினியிடம் சொல்ல அவர் நேரடியாக என்னை வந்து நான் உங்களுடன் சேர்ந்து படம் பண்ணலாம்னு ஆசையா இருக்கேன் ஆனா உங்களுக்கு ரொம்ப கோபம் அதிகமாக வரும் போல என்னை அடிச்சிடாதிங்க என கூற எனக்கு ஒரே சிரிப்பு வந்துடுச்சு பின் ரஜினியை வைத்து எஜமானன் என்ற படத்தை எடுத்து அசத்தினார் அதன்பிறகும் ரஜினிக்காக இரண்டு சிறப்பான கதைகளை வைத்து இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரிடம் சொன்னேன் ஓகே சொன்னார் படத்தின் பட்ஜெட் மட்டும்தான் அந்த கதைக்கு கொஞ்சம் அதிகம் படத்தின் கதையை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி கமீட் ஆனார். பாதி படம் எடுத்திருந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சிக்காக பத்து பதினைந்து ஹெலிகாப்டர்கள் வேண்டுமென கூட உடனடியாக தயாரிப்பு நிறுவனம் படத்தை பாதியிலேயே போட்டுவிட்டது.  அதன் பிறகு அந்த படமும் எடுக்கப்படவில்லை ஆர் வி உதயகுமார் ரஜினியை வைத்து முதலில் எடுத்த எஜமான் படத்தை தவிர இவர்கள் இருவரும் இணைய முடியாமல் போனது.

Leave a Comment