ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அவதார் படத்தின் அட்டகாசமான டீசர்.! என்னமா மிரட்டி உள்ளார்கள் பார்த்தீர்களா

0

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தமிழ் திரைப்படங்களை விரும்பி பார்ப்பது மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹாலிவுட் என அனைத்து திரைப்படங்களையும் விரும்பிப் பார்ப்பார்கள் அந்த வகையில் ஹாலிவுட் திரைப் படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. ஹாலிவுட் திரைப்படம் என்றாலே இளசுகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த டீசர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகிய அவதார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 19 ஆயிரத்து 210 கோடி ரூபாய் வசூல் செய்தது இந்த திரைப்படத்தின் வசூலை இன்னும் எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை அந்த அளவு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது 160 மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. அதுுுமட்டுமில்லாமல் படத்தை வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள் இந்த திரைப்படம் வெளியாகி முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

13 வருடங்கள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது வருகின்ற 2024 ஆம் ஆண்டு இந்த திரைப் படத்தின் மூன்றாம் பாகத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதோ டீசர்.