உலகமே எதிர்பார்த்த அவதார் 2 படம் – இரண்டு நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளி வருகின்றன அதை ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடினாலும் மறுபக்கம் பிறமொழி படங்களான ஹாலிவுட் படம், கொரியன் படம் என அனைத்து விதமான படங்களையும் பார்த்து ரசிக்கின்றனர் அதிலும் குறிப்பாக ஹாலிவுட் படங்களுக்கு என தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் அவதார் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்தனர் ஆனால் இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக சில தினங்களுக்கு முன் தான் திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் தனக்கே உரிய ஸ்டைலில் எடுத்திருந்தார் அவதார் 2 படம் உலகம் முழுவதும் வெளியாகியது படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்தது குறிப்பாக இந்த படத்தில் நீருக்கு அடியில் வரும் காட்சிகள் மற்றும் சண்டை சீன்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மிரள வைத்தது.

மேலும் அவதார் 2 படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர் அதன் காரணமாக படம் பல்வேறு இடங்களில் ஹவுஸ் புல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு நாள் முடிவில் அவதார் 2 திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் 136.5 மில்லியன் வசூல் செய்திருக்கிறது இந்தியாவில் மட்டுமே நேற்று  சுமார் 55 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment