பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் அவதார் 2 இதுவரை எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா.! இதோ முழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்…

தமிழ் சினிமா ரசிகர்களை பொருத்தவரை தமிழ் படங்களை மட்டும் பார்க்காமல் வேற்று மொழி திரைப்படங்களையும் விரும்பி பார்ப்பார்கள் அந்த வகையில் சமீப காலமாக பல மொழி திரைப்படங்கள் தமிழில் ஹிட் அடித்து வருகின்றன. அப்படிதான் ஆர் ஆர் ஆர்,  கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியது. அதேபோல்  தமிழ் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் திரைப்படத்தையும் மிகவும் விரும்பி பார்ப்பார்கள்.

ஹாலிவுட் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவதார். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் கேமருன் இயக்கத்தில் உருவானது இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் நம்மளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது இந்த திரைப்படம் ஆயிரம் கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது 13 வருடம் கழித்து இரண்டாவது பாகத்தை டிசம்பர் 16ஆம் தேதி வெளியிட்டுள்ளார்கள். முதல் பாகத்தைப் போல் மிகவும் சிறப்பான காட்சிகள் பிரம்மாண்ட காட்சிகள் என பட்டையை கிளப்பி உள்ளார்கள் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் இந்திய அளவில் 160 கோடி வசூலித்ததாக தகவல் கிடைத்தது.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்டன இந்த நிலையில் உலகம் முழுவதும் அவதார் திரைப்படம் எட்டாயிரம் கோடியை வசூலித்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை ஒரு மில்லியன் வசூல் மட்டுமே கிடைத்துள்ளது இந்த நிலையில் இரண்டு மில்லியன் டாலர் வசூல் பெற்றால் மட்டுமே இந்த திரைப்படம் லாபத்தை பெரும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஆனாலும் அவதார் திரைப்படம் அதைவிட மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் எனவும் இனி வரும் நாட்களில் மிகப்பெரிய வசூலை அவதார் அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment