அன்று லாரி ஓட்டுநர்.. ஆனால் இன்று உலகமே வியக்கும் இயக்குனர்.. யார் இவர் தெரியுதா.?

கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு லாரி ஓட்டுனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் இன்று பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார்.

வாழ்க்கையில் இன்று நாம் இருக்கும் நிலைமை தொடராது அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது அப்படிதான் ஒரு காலத்தில் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு லாரி ஓட்டுனராக திகழ்ந்தவர் இன்று பிரம்மாண்ட படங்கலுக்கு  இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அப்படிதான் சினிமாவை காட்டிலும் நிஜத்தில் நடக்கும் தனிநபர் சாதனை மிகவும் ஆச்சரியப்படுத்தும் அதேபோல் இந்த இயக்குனர் வாழ்க்கையும்.

உலகம் முழுவதும் வெளியாகிய கிராபிக்ஸ் காட்சிகளால் ஆச்சரியமூட்டி இருக்கும் திரைப்படம் தான் அவதார். இந்த திரைப்படத்தின் இயக்குனர் தான் ஜேம்ஸ் கேமரூன். இவர் உலக அளவில் அறியப்பட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு சொந்தக்காரர். இவர் முதல் பாகம் அவதார் உலக அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. மேலும் உலக பணக்காரர்களில் ஒருவராக தற்பொழுது திகழ்ந்து வருகிறார்.

இவரைப் பற்றி பலருக்கும் தெரியாத உண்மை இது தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நல்ல வேலை கிடைக்காமல் லாரி ஓட்டுனராக பணியாற்றினார். அதன் பிறகு திரைப்படங்களில் அதிக ஆர்வம் அதனால் வாரத்திற்கு 175 டாலர் சம்பளத்தில் ரோஜர் காரமனின்  நியூ வேர்ல்ட் பிக்சரில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு பிரண்ஹா 2 தி ஸ்பானிங்  என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்தத் திரைப்படம் முடியும் முன்பே அவரை இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இவர் முதல் திரைப்படம் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

இந்த திரைப்படம் உலக அளவில் 78 மில்லியன் வசூலை குவித்தது. மேலும் 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற காதல் ஓவியத்தை படைத்து மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த திரைப்படம் உலக அளவில் கொண்டாடி தீர்த்த வேளையில் 12 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அவதார் என்ற பிரம்மாண்டத்தின் உச்சத்தை கொடுத்தார்.

அதேபோல் இவர் இயக்கிய டெர்மினேட்டர், டைட்டானிக், தி அபிஸ் ஏலியன்ஸ், அவதார், அவதார் த வே ஆப் வாட்டர்  ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை குவித்து தந்தது. இதன் விளைவாக இவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் நிலையில் அவதார் மூன்றாவது பாகமாக  அவதார் பயர் அண்ட் ஆஸ் திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் 3000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது இதனால் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் அந்த இயக்குனர்.