பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டம் காட்டும் அவதார் 2..! இணையத்தை கதிகலங்க வைத்த ட்ரெய்லர்..!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை மிரளவைத்த ஒரு திரைப்படம் என்றால் அது அவதார் திரைப்படம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் ஆனது அன்றைய காலகட்டத்திலேயே மிக பிரம்மாண்டமான தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய சாதனை படைத்தது இதன் மூலமாக பல விருதுகளை தட்டிச் சென்ற இந்த திரைப்படத்தை சுமார் 5 பாகங்களாக எடுக்கப் போவதாக நமது ஜேம்ஸ் கேமரூன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் அறிவித்த நாளிலிருந்து ரசிகர்கள் இதனுடைய அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்த பிறகு அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் ஆனது கடந்த வருடமே வெளியாக இருந்தது ஆனால் அப்பொழுது வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் தலைவிரித்து ஆடியதன் காரணமாக இந்த ஆண்டு வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்கள். என்னதான் புது புது டெக்னாலஜிகல் வந்திருந்தாலும்  கற்பனைக்கு எட்டாத விஷயங்களை காட்டும் அவதார் திரைப்படம் மிகவும் சிறப்பு தான்.

அந்த வகையில் தற்போது வெளியான இரண்டாம் பாகத்தின் டிரைலரை ரசிகர்கள் அவனுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இதில் இருக்கும் பல்வேறு விஷயங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமில்லாமல் இவை நீருக்குள் இந்த திரைப்படம் எடுக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவித்த நிலையில் அதுவரை ரசிகர்கள் எவ்வாறு காத்துக் கொண்டிருப்பார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது ஏனெனில் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை பெருமளவு ஆர்வத்தை மூட்டி உள்ளது.

Leave a Comment