அவன் இவன் திரைப்படத்தில் ஆர்யா மற்றும் விஷாலுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்களா.. இவங்களுக்கு அந்த ரோல் செட்டாகாது.

avan ivan
avan ivan

தமிழ் சினிமாவில் ரசிகர்களை விரும்பும் வகையில் பல சுவாரசியமான திரைப்படங்களை அறிமுகப்படுத்தி வருபவர்தான் இயக்குனர் பாலா.  இவர் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகி சில வருடங்கள் ஆனாலும் கூட தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

அதோடு இவர் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களாக அமைந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் விக்ரம் மகனான துரு விக்ரமை வைத்து திரைப்படத்தை உருவாக்கி வந்தார்.

ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை மீண்டும் அந்த படத்திற்கு புதிய இயக்குனர் ஒருவரை வைத்து தயாரித்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் பாலா அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் பாலா இயக்கத்தில் வெளிவந்து பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் பல வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் தான் அவன் இவன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியாக இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இத்திரைப்படத்தில் விஷால் ஆர்யா இருவரும் நடித்து இருந்தார்கள்.

இவ்வாறு நல்ல விமர்சனத்தை பெற்று அமோக வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் முதன்முதலில் நிஜ அண்ணன் தம்பிகளான நடிகர்களை தான் பாலா நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.அந்த வகையில் சூர்யா-கார்த்திக்,ஜீவா – ஜித்தன் ரமேஷ் என இந்த நிஜ அண்ணன் தம்பிகளான இவர்களை தான் முதலில் தேர்வு செய்துள்ளாராம்.ஆனால், அது சரியாக வரவில்லை என்பதால் இறுதியில் ஆர்யா விஷாலை தேர்வு செய்துள்ளார்.