ஐபிஎல் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினால் 5 ஆண்டு சிறைதண்டனை.? காரணம் இது தாங்க..

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி தற்போது 14வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாட இந்தியா மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என பலதரப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு அதிரடியான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது ஆஸ்திரேலியா நாட்டிற்கு தற்பொழுது யார் உடனடியாக செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 19 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என கூறி உள்ளது.

இதனால் அங்கு செல்ல முடியாமல் இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய வாழ் மக்களும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் தற்போது இங்கேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது. அதற்கு காரணம் கொரோனா இரண்டாம் அலை அதிகமாக வீசுவதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தோற்று  வந்துவிட்டால் அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐபில் போட்டியில் பங்குபெற்று உள்ள ரிக்கி பாண்டிங், மேக்ஸ்வல் உட்பட 14 ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டியில் பணியாற்றி வருகின்றனர் அவர்கள் தற்போது ஆஸ்திரேலிய திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment