தல தோனி இல்லை என்றால் இந்திய அணி ஒன்றுமே இல்லை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்.!

0
dhoni
dhoni

உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் ரன் அவுட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. இதையடுத்து தோனி எப்பொழுது ஓய்வு அறிவிப்பார் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது.

ஆனால் தோனி எக்காரணத்தைக் கொண்டும் ஓய்வு அறிவிக்கக் கூடாது என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் ரசிகர்கள் வரை கருத்துக் கூறி வருகிறார்கள் , ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜீனியஸ் என்றால் அது தோனி தான் அவர் இல்லாமல் இந்திய அணியில் ஒன்றும் செய்ய முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி ரன் அவுட்  ஆகவில்லை என்றால் கண்டிப்பாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இருப்பார், அவர் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது ஏனென்றால் தோனி இல்லை என்றால் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கவே முடியாது, அதே போல் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று தான்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இதுபோன்ற சூழ்நிலையில் தோனி இல்லாமல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை, தோனி 2 ரன்கள் ஓடி விட்டு வரும் பொழுது கிரீசுக்கு சில இன்சுகள் மட்டுமே பின் தங்கியிருந்தார், தோனி ரன் அவுட் ஆகவில்லை என்றால் இந்தியாவுக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுத்து இருப்பார் அதேபோல் ஒருநாள் போட்டியில் சேசிங் என்பது கடினமான ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். இதுவரை விளையாடியவர்களை காட்டிலும் டோனி மிகவும் சிறப்பாக விளையாண்டார். 240 ரன்கள் இந்தியா எளிதாக சேஸிங் செய்து விடும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஹென்றி பந்துவீச்சில் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து விட்டார்கள் இந்தியா.

அதனால் இந்தியா மிகுந்த வேதனைக்கு ஆளாகியிருப்பார்கள் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது வில்லியம்ஸ் ராஸ் டெய்லர் இருவரும் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்கள்.