விஜய் டிவியின் டிஆர்பியை எகிர வைக்கும் பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சியை சேரும். ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
அதற்கு கமல் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்குள் வந்தார். ஆனால் கமல் அளவுக்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இருந்தாலும் கடந்த சீசனை வெற்றிகரமாக முடித்தார். அதை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் 9வது சீசன் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து பார்வையாளர்களை மட்டுமல்லாமல் பிக்பாஸையே கடுப்பேற்றிக் கொண்டிருக்கின்றனர் போட்டியாளர்கள்.
விஜய் சேதுபதி கூட வார இறுதியில் கோபத்தின் உச்சியில் கத்தும் சம்பவமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியாக 50 நாட்களைக் கடந்து நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருப்பது ஆச்சரியம் தான்.
ஆனால் முன்பு இருந்த பார்வையாளர்களின் அளவு தற்போது கணிசமாக குறைந்து விட்டதை மறுக்க இயலாது. அதனாலேயே ஏதாவது ஒரு சண்டையை தினந்தோறும் உருவாக்கி வருகிறது டீம்.
அதேபோல் ஒரு நாளைக்கு நான்கு ப்ரோமோக்கள் கூட வெளி வருகிறது. ஆனால் 4 இல்ல 40 ப்ரோமோ போட்டாலும் ஒன்னும் வேலைக்காகாது என்பதுதான் ஆடியன்ஸின் வெளிப்படையான கருத்து. இப்படியாக மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நிகழ்ச்சி இந்த ஒன்பதாவது சீசனில் பரிதாபத்திற்குரியதாக மாறி இருக்கிறது.