அஜித் ரசிகர்கள் உடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்திய போலீஸ் – வைரலாகும் வீடியோ.

ajith
ajith

பல்வேறு தடைகளை தாண்டி அஜித்தின் வலிமை படம் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக இன்று பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியேது. வலிமை படத்துக்கு ஏற்கனவே அஜித் ரசிகர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று இரவிலேயே கோலாகலமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இரவு முழுவதும் தூங்காமல் ரசிகர்கள் வெடிகளை வெடித்தும், கேக்குகளை வெட்டியும், அலப்பறை செய்து உள்ளனர். சொல்லப்போனால் தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வலிமை படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வலிமை படத்தை பார்த்து விமர்சனங்களையும், கருத்துக்களையும் கொடுத்து வருகின்றனர். எல்லாமே சிறப்பாக சொல்லி வருகின்றனர்.

வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், திரில்லர், சென்டிமெண்ட் கலந்து இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் என தெரியவருகிறது. படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்-நடிகைகளும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து மிரள வைத்துள்ளனர்.

வலிமை படம் முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் மட்டும் 30 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது சொல்லப்போனால் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களின் வசூலை முதல் நாளில் முறை அடித்து மாஸ் காட்டி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை இன்று கோலாகலமாக நள்ளிரவுகொண்டாடி வருகின்றனர்.ஆ

அயிரக்கணக்கான  அஜித் ரசிகர்கள் திரையரங்கை நாடிகொண்டாடி வந்தனர். இந்த நிலையில். ரசிகர்களுடன் சேர்த்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஒருவரும்  இணைந்து செம குத்தாட்டம் போட்டு ஆடி உள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள். வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அவரும் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பரோ எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.