முக்கிய இடத்தில் வாரிசை அடித்து நொறுக்கிய துணிவு.!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு இருந்த திரைப்படம் என்னவென்றால் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டும் தான். சினிமா துறையில் எந்த நடிகர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ விஜய் அஜித் திரைப்படத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அந்த வகையில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல வம்சி இயக்கி உருவான வாரிசு திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியானதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் கடுமையான முறையில் போட்டி போட்டுக் கொண்டு வலம் வந்தார்கள்.

இதனை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் வெளியான முதல் நாளே ஏகபோக வரவேற்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல் டிக்கெட் இல்லாமல் பல ரசிகர்கள் வீடு திரும்பினார் அந்த அளவிற்கு இந்த இரண்டு திரைப்படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் வெளியான மூன்று நாட்களில் வாரிசு படத்தை விட நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் அதிக வசூலித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது இதனை தொடர்ந்து வாரிசு படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கடந்த 20 வருடங்களாக இது போன்ற ஒரு கதையை தான் தேடிக் கொண்டு வந்தாராம்.

ஒரு குடும்ப செண்டிமெண்டாக உருவாக்கி உள்ள வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வாரிசாக உலா வருகிறது மேலும் துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் வங்கியில் நடக்கும் ஊழல்களை மையப்படுத்தி அழகாக கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தையும் பார்த்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ஜெர்மனி நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் முதல் நாளில் துணிவு படம் மட்டும் எட்டு லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனால் வாரிசு திரைப்படம் துணிவை விட குறைவான வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment