பிரபல நடிகருடன் அடுத்த திரைப்படத்தில் கைகோர்க்கும் அட்லீ.!

0

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே வெற்றிகண்ட இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் தான் அட்லீ இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களிலேயே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.

இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை முதலில் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவர் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் தற்போது தமிழ் சினிமாவைத் தாண்டியும் பல மொழி திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்று விட்டது இந்நிலையில் இவரை பற்றி தான் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது இவருக்கு உதவி இயக்குனர் ஒருவர் இயக்கும் திரைப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தை அட்லீயின் சொந்த தயாரிப்பு நிறுவனமான A For Apple இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற வேண்டும் என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் அட்லீ இயக்கும் புதிய திரைப்படங்கள் பற்றியும் சமூக வலைதளங்களில் பல கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள்.

atlee2
atlee2

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக விஜயை வைத்து இயக்கிய 3 திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்துவிட்டது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இவர் மீண்டும் விஜயுடன் இணைவாரா என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்புகிறார்கள்.