தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் நடித்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் அனைத்து உலக அளவில் மிக பிரம்மாண்டமாக ஹிட்டடித்தது.
இவ்வாறு வெளிவந்த இந்த பாடலுக்கு இயக்குனரான அனிருத் அவர்கள்தான் இசையமைத்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தை தனுஷ் நடித்து தயாரித்த மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளார். இவ்வாறு பிரபலமான இயக்குனர் அனிருத் அவர்கள் தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப் படங்களில் பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது விஜய், அஜித், ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன் என பலருடைய திரைப்படத்தில் பணியாற்றிய நமது இசையமைப்பாளர் விக்ரம் திரைப்படத்திற்கு போட்ட இசையானது இன்றும் ரசிகர்களின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்களை விட சினிமாவில் மிக பிஸியாக இருக்கும் ஒரு பிரபலம் என்றால் அது அனிருத் தான். இந்நிலையில் வருடத்திற்கு 6 முதல் 7 திரைப்படத்திற்கு இவர் இசையமைத்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இவருடைய கைவசம் பல்வேறு திரைப்படங்கள் தற்பொழுது இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பொதுவாக நமது இசையமைப்பாளர் அனிருத்துக்கு அமெரிக்காவில் அதிக அளவு ரசிகர் கூட்டம் இருப்பது மட்டுமில்லாமல் அங்கு அடிக்கடி சென்று வருவார் அப்பொழுது ஜவான் திரைப்படத்தின் வேலை கொஞ்சம் இருப்பதன் காரணமாக அட்லீ கேட்டுக் கொண்டதன் காரணமாக அனிருத் இதை முடித்து கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் திடீரென சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆனது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு ரீரெக்கார்டிங் போட்டு தாறுமாறாக கால்ஷீட் வாங்கி விட்டார்களாம். இதனால் அனிருத் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல இருந்த ஆசை மண்ணாக போய் விட்டதாக தெரிய வந்துள்ளது.