ஆங்கில புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அட்லி.! இந்த முறை செய்கை எல்லாம் சிறப்பா இருக்கும் போல.?

0
atlee
atlee

விஜய்யை வைத்து ஹேட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தாக டபுள் ட்ரீட் கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். விரல்களை விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் அட்லி விஜய்யை வைத்து கிட்டத்தட்ட மூன்று படங்களை இயக்கியுள்ளார் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களையும் இயக்கி உள்ளார்.

எனதன் இந்த மூன்று படங்களும் காப்பியாக இருந்தாலும் இந்த மூன்று திரைப்படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அட்லீ அவர்கள் தமிழை தாண்டி தெலுங்கு பக்கம் திரும்பி உள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ஷாருக்கானை வைத்து தற்போது ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நேரத்தில் சில பிரச்சனையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது அதன் பிறகு தற்போது இறுதி கட்ட படபிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அட்லியின் மனைவி பிரியா இட்லி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அட்லி அவர்கள் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பிரியா இட்லியின் வளைகாப்பு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து அந்த விழாவில் நடிகர் விஜயும் கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி இந்த நாள் இந்த வருடம் இரண்டுக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக பகிர்ந்து உள்ளார்.

முதலாவதாக பிப்ரவரி மாதத்தில் தங்களது குழந்தைக்காக காத்திருப்பதாக அட்லி கூறி உள்ளார். அதன் தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி வரும் ஜவான் திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். இதனால் இந்த வருடம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருப்பதாக கூறபடுகிறது.