தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அட்டகத்தி தினேஷ் இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், இந்தநிலையில் அட்டகத்தி தினேஷ் அறிமுக இயக்குனர் கோபி இயக்கத்தில் நானும் சிங்கிள் தான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஷ் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் மொட்டை ராஜேந்திரன் மனோபாலா செல்வேந்திரன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
ஜெயகுமார் மற்றும் புன்னகைப்பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள் படத்தை. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
