“ஏடிஎம்மில் நுழைந்த பிச்சைக்காரன் அங்கிருந்த வாட்ச்மேன் செய்ததைப் பாருங்கள்”

இப்பொழுது நம் நாடு இருக்கின்ற சூழ்நிலையில் படித்த பட்டதாரிகள் இருக்கும் அளவிற்கு பிச்சைக்காரர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். என்னதான் நம் நாடு வளர்ச்சியடைந்த நிலையில் இருப்பினும் பிச்சைக்காரர்கள் குறையவில்லை. இதில் ஆதரவற்ற வயதானவர்கள் அதிகம் உள்ளார்கள். இந்த ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு பல இளைஞர்கள் இன்றும் உதவி கொண்டு தான் இருக்கிறார்கள்.

இன்று டில்லியில் இருக்கின்ற ஒரு ஏடிஎம் வாசலில் ஒரு வயதான முதியவர் குளிரில் நடுங்கிக்கொண்டு படுத்திருந்தார். அவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன் முதியவரை எழுப்பினார்.

அந்த முதியவரால் எழுந்திரிக்க முடியவில்லை. அதனால் ஏடிஎம் வாட்ச்மேன் அவரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு தான் தங்கம் இடத்திற்கு கொண்டு சென்றார். முதியவரை உறங்க வைத்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பினார். அந்த வாட்ச்மேன் நைட் ஷிப்ட் முடிந்து உணவும் வாங்கிச் சென்று அந்த முதியவருக்கு கொடுத்தார்.

முதியவருக்கு மயக்கம் தெளிந்ததும் இரவு நடந்த அனைத்தையும் அந்த வாட்ச்மேன் கூறினார். முதியவர் வாட்ச்மேனுக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி சென்றுவிட்டார்.

ஊர் பெயர் தெரியாத இந்த முதியவருக்கு தங்க இடமும் கொடுத்து, உண்ண உணவும் கொடுத்து தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்த ஏடிஎம் வாட்ச்மேன்.

Leave a Comment