அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டிக்கு விசிட் அடித்த “இரண்டு டாப் ஜாம்பவான்கள்”..! ட்ரெண்டிங் புகைப்படம்.

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார் மேலும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் லிஸ்ட்டிலும் இவர் இடம் பெறுகிறார் இயக்குனர் அட்லீ தமிழில் இதுவரை எடுத்த ராஜா ராணி, பிகில், தெறி, மெர்சல் போன்ற படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன.

மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல ஹீரோக்களை வைத்து படங்களை இயக்குனர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாலிவுட் பக்கம் திசை திரும்பினார் இப்பொழுது ஷாருக்கான் வைத்து ஜவான் என்னும் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சானியா.

மற்றும் மல்கோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தில் தளபதி விஜய் கேமியோ  ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ராணுவ சம்பந்தப்பட்ட படமாக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நயன்தாரா ஒரு சிறை கைதியாக நடிக்கிறார் என்றும் ஷாருக்கான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த படம் அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அட்லியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்துள்ளது இதனை அடுத்து பார்ட்டி நடத்தப்பட்டது அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முக்கியமாக ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் இருவரும் கலந்து விழாவை வேற லெவலில் சிறப்பித்தனர் மேலும் அட்லீ, தளபதி விஜய், ஷாருக்கான் ஆகிய மூவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதனை அட்லீத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மை டியர் ஷாரூக், என்னோட அண்ணன் தளபதி விஜய் என கூறியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment