பணத்திமிர்ல தான் இப்படி செய்கிறீர்கள்.! அட்லி மனைவி ப்ரியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கோபம்

0
atlee
atlee

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கிய மிக வேகமாக முன்னணி இயக்குனர் அந்தஸ்தைப் பெற்றவர் அட்லி, இதுவரை இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஹிட் வரிசையில் இணைந்து விட்டன, ஆனால் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சர்ச்சைகளை சந்திக்கும், கதையை திருடி எடுப்பவர் என ஒரு விமர்சனம் இவர் மீது இருக்கிறது, தற்பொழுது இவர் பணத்திமிர் கொண்டவர் என்ற விமர்சனமும் இவர் மீது உண்டாகியுள்ளது.

அட்லி மனைவி விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர், அதன் பின்பு பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார், அட்லிக்கும் பிரியாவுக்கும் 2014 தான் திருமணம் நடைபெற்றது, ப்ரியா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அட்லியை திருமணம் செய்துகொண்ட பிறகு பிரியா புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்,

அதேபோல் பிரியா தனது திருமணத்திற்கு பிறகு, அட்லி பங்குபெறும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வார் மேலும் பல பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டு வருவார், இந்த நிலையில் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது, அட்லி மற்றும் பிரியா இருவரும் தங்கள் வளர்க்கும் நாய்க்கு பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம்தான் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

அந்த நாய்க்குட்டிக்கு பக்கி என்ற பெயர் இதன் மூன்றாம் ஆண்டு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பணம் திமிரில் இப்படி எல்லாம் செய்கிறீர்கள், நாய்க்கு கேக் வெட்டுவதற்கு பதிலாக பசியால் துவண்டு இருக்கும் மனிதருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என கமென்ட் செய்துவருகிறார்கள்.

priya
priya