சம்பளத்தை உயர்த்திய அட்லீ.. ஆனா அந்த விஷயத்தில் பச்ச புள்ளைத்தனமா இருக்காரே..

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. முதலில் இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அனைத்து விஷயங்களும் கற்றுக்கொண்டு ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

ராஜா ராணி என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து மிகப் பெரிய ஒரு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஹிந்தி பக்கம் சென்றார் அங்கு ஷாருக்கானுக்கு கதை சொல்லி புக் ஆனார். தற்பொழுது ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் முடித்துவிட்டு தளபதி 68 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார் அந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்..

மேலும் இந்த படத்திற்காக அவர் 50 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் சம்பள விஷயத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கரையே ஓவர் டேக் செய்துள்ளார். சம்பளம் அதிகமாக வாங்கினாலும் ஆட்டிடியூட் விஷயத்தில் அட்லீ சின்ன பிள்ளைத்தனமாக இருந்து வருகிறார்.

சங்கர் சூட்டிங் ஸ்பாட் இருக்கு தனி ஆளாக வருவார் ஆனால் அட்லீ அதற்கு எதிர் மாறாக உள்ளவர் ஷூட்டிங் ஸ்பாட்க்கு வரும் பொழுது 10 பவுன்சர்கள் அவர் கூட வருவார்கள். அதற்கும் தயாரிப்பாளர்கள் தான் செலவு செய்ய வேண்டும். டாப் நடிகர்களே தனியாகத்தான் வந்து இறங்குகிறார்கள் இவர் இப்படி அலப்பறை பண்ணுவது கொஞ்சம் ஓவர் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment