பிகில் ராயப்பன் குறித்து ட்வீட் போட்ட அட்லீ – மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்.! இது நடக்குமா..

atlee
atlee

இளம் இயக்குனர்கள் அண்மைகாலமாக சிறப்பான படைப்புகளை கொடுத்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கின்றனர். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து தற்போது சிறந்த படைப்புகளை கொடுத்து அசத்தி வருவர் அட்லீ இவர் முதலில் ராஜா ராணி என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் அட்லீ.

அதனை தொடர்ந்து ஹிந்தி பக்கம் தனது ரூட்டை மாற்றி அங்கு கிங்காங் என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயின்னாக நடிக்கிறார்.

மலையாள நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யோகி பாபு காமெடியான நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில்  அமேசன் பிரைம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முழுக்க முழுக்க ராயப்பன் மையமாக வைத்து ஒரு கதை உருவாக்கினால் எப்படியிருக்கும் என பதிவிட்டு இருந்தது இதற்கு இயக்குனர் அட்லீ தெரிவித்தது.செஞ்சிட்டா போச்சு என பதிவிட்டிருந்தார். இதை கண்ட இவர்கள் தற்போது செம்ம உற்சாகமடைந்துள்ளனர்.