விஜயகாந்த் படத்தை காப்பி அடித்த இயக்குனர் அட்லீ.? வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லீ. இவர் இதுவரை எடுத்த பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான் ஆனால் அதில் ஒரு சில படங்கள் வேறு படத்திலிருந்து காபி அடிக்கபட்டதாக கூறப்படுகிறது. இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்..

ஆம் நான் பல படங்களில் இருந்து கொஞ்சம் சீன்களை எடுத்து தான்.. படத்தை உருவாக்குகிறேன் என இயக்குனர் அட்லீ பல தடவை கூறியிருக்கிறார்.. இதுவரை இயக்குனர் அட்லீ ராஜா ராணி, தெறி, பிகில், மெர்சல் போன்ற படங்களை எடுத்தார் இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்தி பக்கம் சென்று..

டாப் நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு கதையை சொல்லி தற்போது ஜவான் என்ற பெயரில் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் கைகோர்த்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு போன்ற பல முன்னணி  நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தையும் காப்பி அடித்து உள்ளதாக ஒரு சர்ச்சை உருவாகி உள்ளது.

ஜவான் படத்தின் கதை கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான பேரரசு கதை தான் என அவர் மீது பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் இந்த புகார் மீதான விசாரணை வருகின்ற ஒன்பதாம் தேதிக்கு மேல் நடக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் இயக்குனர் அட்லீ நீங்கள் ஹிட் படம் கொடுப்பது ஓகே என்றாலும் அதை உங்களால் சொந்தமாக கொடுக்க முடியாதா ஏதோ ஒரு படத்தை மெனக்கட்டு ஒருவர் எடுத்து இருப்பார்கள் அதை காப்பி அடித்து நீங்கள் ஹிட் கொடுப்பதெல்லாம் ஒரு விஷயமா எனக் கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment