ஜவான் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோ.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்துப்போன அட்லீ

தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர் அட்லீ.. இவர் கடைசியாக தமிழில் தளபதி விஜய் வைத்து “பிகில்” என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் படம் பண்ணுவார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் ஹிந்தி பக்கம் சென்று பாலிவுட் பாஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சானியா மல்கோத்ரா மற்றும் பல திரைபட்டாளங்கள் இந்த படத்தில்  விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் படத்தின் சூட்டிங் மும்பை மற்றும் பல முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் அட்லீ நினைத்தது எல்லாம் ஒர்க் அவுட்டாகி இருந்தாலும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முதலில் விஜய்யை அணுகி உள்ளார் அட்லீ ஆனால் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை இதனை அடுத்து புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

அவருக்கு பிடித்து இருந்தாலும் புஷ்பா 2 ஷூட்டிங் காடு, மலை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அல்லு அர்ஜுனன் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை இதனால் ஜவான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தற்போது அல்லு அர்ஜுனும் தவற விட்டிருக்கிறார் என கூறப்படுகிறது எனவே அந்த கெஸ்ட் ரோலில் வேறு ஒரு டாப் ஹீரோவை நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர் எதிர்பார்க்கும் ஹீரோ இதுவரை சிக்க வில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஜவான் படப்பிடிப்பு முழுமை பெறாமல் தவித்துக் கொண்டிருக்கிறதாம் இது அட்லீக்கு தலவலியை கொடுப்பதை விட ஷாருக்கானுக்கு தான் பெரும் தலைவலியை கொடுக்கிறதாம் ஏனென்றால் இந்த திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறதாம் நாட்கள் இழுக்க சில கோடிகள் நஷ்டம் அடையும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment