ஒரு செல்ப்பி கூட திருடி தான் போடனுமா.! நீ திருந்த மட்டால. அட்லி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

ராஜா ராணி இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லி, ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து அட்லி விஜய் தான் தெறி மெர்சல் பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கினார், இந்த மூன்று திரைப்படங்களும் ஹிட் அடித்தது.

என்னதான் அட்லி இயக்கிய திரைப்படங்கள் ஹிட் அடித்தாலும், ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களையும் பெற்று வந்தது, அட்லி மற்ற திரைப்படத்தில் இருக்கும் காட்சிகளை இவர் காப்பியடித்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. விஜய் எப்பொழுதும் ஒரு இயக்குனருக்கு தொடர்ந்து திரைப்படங்களை கொடுக்கவே மாட்டார் ஆனால் அட்லி மீது உள்ள நம்பிக்கையில் தொடர்ந்து திரைப்படம் கொடுத்துள்ளார்.

தற்பொழுது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் நேற்று காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியது இது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் கொண்டாட செய்துள்ளது.

https://twitter.com/red_ar66/status/1228365187633139718?s=20

விஜய் எப்பொழுதும் அட்லி அண்ணா என்றுதான் அழைப்பார் அந்தளவு விஜய் மீது அட்லீக்கு பாசம். இந்த நிலையில் நேற்று உலகமே காதலர் தினம் கொண்டாடியது. அதேபோல் அட்லீ தனது மனைவி பிரியா உடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார், அப்பொழுது அட்லி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்தை கூறினார்.

அந்தப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மரணமாக கலாய்த்து வருகிறார்கள். மேலும் அந்தப் புகைப்படத்தை பார்த்து இதையும் காப்பியடித்து உள்ளீர்கள் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment