இயக்கியது வெறும் 4 திரைப்படம் தான் ஆனால் அட்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி, இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சங்கரின் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

பிறகு முதன்முதலாக ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இளம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமே வெற்றித் திரைப்படமாக அமைந்தது அதனால் அடுத்ததாக முன்னணி நடிகர் விஜயுடன் கைகோர்த்தார்.

விஜயுடன் தெறி படத்தில் இணைந்து மீண்டும் ஹிட் படத்தைக் கொடுத்தார் அதன் பிறகு விஜய்யுடன் மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை இயக்கினார்.

தற்போது அட்லி பாலிவுட் திரைப்படத்தை இயக்க இருக்கிறார், அதனால் கதை எழுதுவதில் மும்முரமாக இருக்கிறார். என்னதான் அட்லீ ஹிட்  திரைப்படத்தை கொடுத்தாலும் அவரின் திரைப்படங்கள் விமர்சனங்களை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அட்லியின் திரைப் பயணத்தை பற்றி பலருக்கும் தெரியும் ஆனால் அவரின் சம்பளம் சொத்து மதிப்பு பற்றி யாருக்கும் தெரியாது, அட்லீ பிகில் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் 25 கோடி ரூபாய், அட்லி வீட்டின் சொத்து மதிப்பு 75 லட்சம்.

அட்லியின் முழு சொத்து மதிப்பு 50 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தகவல் உண்மையான தகவல் இல்லை என்றாலும் ஹாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.