வெளியாகியது அட்லி திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு.! ஹீரோ யார் தெரியுமா.?

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லி ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர், இவர் முதன்முதலில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் நஸ்ரியா, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியவர் அட்லி.

இவர் இயக்கிய முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் கோலிவுட்டில் அடுத்து முன்னணி நடிகரை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

என்னதான் இவர் முன்னணி இயக்குனராக வலம் வந்தாலும் இவர் மீது விமர்சனங்கள் கடுமையாக வந்துகொண்டே இருக்கின்றன ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படங்கள் பல திரைப்படத்தின் காப்பி எனவும் கூறி வருகிறார்கள், அதற்கு அட்லி இசையில் ஏழு சுரங்கள் இருப்பது போல் படமும் அதே போல் தான் என சிம்பிளாக கூறி முடித்தார்.

அட்லீ இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் 2017 ஆம் ஆண்ட ஜீவா நடிப்பில் வெளியாகிய ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார், இந்த நிலையில் மீண்டும் தயாரிப்பாளராக ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏ பார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ‘அந்தகாரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார், இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் தான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் டிரைலரை பார்த்து விட்டு பல பிரபலங்கள் அட்லீக்கு வாழ்த்து கூறினார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படம் OTT-யில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இல் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

atlee movie
atlee movie

Leave a Comment