கைக்கு எட்டினது வாய்க்கு ஏட்டலையே.! அட்லி பெயரை கேட்டவுடன் தெறித்து ஓடிய நிறுவனம்!!

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி. இவர் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் பிகில். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியது. இப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படம் சுமார் 300 கோடி வசூல் செய்ததாக வெளியிட்டது. இந்தபடமும் பிளாக்பஸ்டர் லிஸ்டில் அமைந்தது.

இதனை அடுத்து அட்லி அவர்கள் ஷாருக்கான் படத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க இருந்த நிலையில் இயக்குனர் அட்லீயின் பெயரை கேட்டவுடன் அந்த நிறுவனம் சற்று தயங்கியது . ஏனென்றால் அட்லீ பற்றி அந்த நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் விசாரித்துள்ளனர்.

அட்லீ பொருத்தவரை தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாமல் செலவு வைப்பார் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அதனைக் கேட்ட நிறுவனம் இன்சூரன்ஸ் கொடுப்பதை நிறுத்தி உள்ளது. இதனால் மிகுந்த வேதனையில் உள்ளார் அட்லி.

இதுமட்டுமில்லாமல் துணை நடிகர்கள் இவரது படத்தில் நடிக்க தயங்குகிறார்கள் ஏனென்றால் துணை நடிகர்களின் முக்கிய கதாபாத்திரத்தை அவர் எடுத்து விடுவதாக ஒரு சில குற்றச் சாட்டும் வைக்கப்படுகிறது. அதுவும் இல்லாமல் சரியாக நடத்தவில்லை என துணை நடிகர்கள் ஊடகங்கள் முன்பு தெரிவித்துள்ளனர். இனி வரும் காலகட்டங்களில் அட்லி தனது தவறை திருத்திக் கொண்டாள் சினிமாவில் நீடிக்க முடியும் என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment