விஜயை வைத்து 600 கோடிக்கு பிளான் போட்ட அட்லி.! போற போக்க பார்த்தா மணிரத்னத்துக்கு டப் கொடுப்பார் போல

நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில், தெரி, ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி. இவருடைய படங்களை கடுமையாக விமர்சித்தாலும் இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வகையில் இயக்குனர் அட்லி தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, இணைந்து நடித்து வருகிறார். மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் தற்போது 400-500 கோடியில் உருவாகியுள்ள நிலையில் அடுத்த படத்தை இதைவிட மிக பிரம்மாண்டமாக எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜவான் படத்தின் ரிலீஷிர்க்காக காத்திருக்கும் அட்லி அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னம் வெளியாகவில்லை அதற்குள் அடுத்த படத்தின் அறிவிப்பு அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் அட்லி அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் விஜயின் அடுத்த திரைப்படம் பிகில் படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சும்மாவே அட்லி தயாரிப்பாளர்கள் காசை சுரண்டிவிடுவார் இந்த முறை 600 கோடி பட்ஜெட்டில் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் போற போக்கை பார்த்தால் அட்லி 1000 கோடிக்கு படத்தை இயக்கப் போகிறார் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment