தோசை சுடுவது போல் கதையை சுட்டு சுட்டு எடுத்த அட்லி. ! தயாரிப்பாளரின் அதிரடி முடிவு.! இனி தமிழில் பட வாய்ப்பு கேள்விக்குறிதான்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லி, இதனையடுத்து இயக்குனர் அட்லி முதன்முதலாக ஆர்யா, ஜெய், நயன்தாரா நஸ்ரியா ஆகியவர்களை வைத்து முதன்முதலாக இயக்கிய திரைப்படம் தான் ராஜா ராணி, இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, படம் வெளியானதும் இந்த திரைப்படம் மௌனராகம் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பிறகு அட்லி இளையதளபதி விஜய் அவர்களை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார்.  இந்தத் திரைப்படமும் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் சாயலில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது, அதேபோல் மீண்டும் விஜய வைத்து மூன்று வேடங்களில் மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படங்களை போன்று இருப்பதாக விமர்சனம் எழுந்தது.

இப்படி அட்லி இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் ஏதாவது ஒரு திரைப் படத்தின் சாயல் இருப்பதால் அட்லி மீது கடும் விமர்சனம் எழுந்தது, இதுகுறித்து அட்லீயிடம் பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது அதற்காக இசையில் ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது அதைப்போல் தான் படத்தின் கதையில், காதல், ஆக்ஷன், காமெடி திரில்லர், சென்டிமெண்ட் என சில வகையான கதைகள் தான் இருக்கிறது அதில் தான் பயணித்தாக வேண்டும் என கூறினார்.

அது மட்டுமில்லாமல் நான் இயக்கம் திரைப்படங்கள் முந்தைய ஹிட் திரைப்படங்களை காப்பி அடிக்கிறேன் என்று சொன்னால் என்னால் ஏற்க முடியாது எனக் கூறினார், அதேபோல் பிகில் திரைப்படமும் ஹிந்தியில் வெளியான சக்தே இந்தியா என்ற திரைப் படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியானது, அதுமட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் பல ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து சுடப்பட்டது என அப்பட்டமாக தெரிந்தது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி மீது மூன்று முகம் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள 5ஸ்டார் ஃபிலிம்ஸ் கதிரேசன் அளித்த புகாரின்படி தமிழ் திரைப்பட சங்கத்தின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, ஆனால் இதுவரை அட்லீயிடம் இருந்து அந்த நோட்டீசுக்கு பதில் வரவில்லை.

நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தும் அட்லி பிகில், சாருக் கான் படம் என பிஸியாக போய்க் கொண்டே இருந்தார், அதனால் இன்னும் அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க வில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது, அதனால் இனி அட்லீ வைத்து படமே தயாரிக்கக் கூடாது என பலர் முடிவு செய்துள்ளார்கள் இந்த தகவல் சமீபத்தில் வெளியானது.

Leave a Comment