என்ன ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா.! இதோ அட்லி வெளியிட்ட பிகில் அப்டேட் இன்னும் சற்று நேரத்தில்.!

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன, பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது ‘பிகில்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, “ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுகொண்டார்.

இந்த நிலையில் அட்லி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை இணைத்து ட்விட் செய்துள்ளார் அந்த போஸ்டரில் நயன்தாரா மற்றும் விஜய் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் உனக்காக என்ற பாடலின் சிங்கிள் ட்ராக் மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார், இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.