“வீட்டிலேயே இருங்கள் பத்திரமாக” எனக் கூறி தனது மனைவி பிரியாவுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி.!

இயக்குனர் அட்லி சில திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்தவர், இவர் முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார், இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தெறி திரைப்படத்தை இயக்கி ரசிகரிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார், இதனைத்தொடர்ந்து விஜயுடன் அடுத்ததாக மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோவை பல பிரபலங்கள் வெளியிட்டு வருகிறார்கள், இந்த ஊரடங்கு உத்தரவை பல பிரபலங்கள் வரவேற்றுள்ளார்கள்.

அந்த வகையில் முன்னணி இயக்குனரான அட்லி தனது டுவிட்டரில் ‘வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக’ எனக்கூறி தனது மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ் போட்டு வருகிறார்கள்.

Leave a Comment