8 வருடங்களுக்குப் பிறகு அழகான குழந்தைக்கு அப்பா அம்மாவாக மாறிய அட்லி மற்றும் பிரியா.! என்ன குழந்தை தெரியுமா.?

0
atlee
atlee

பிரபல இயக்குனர் அட்லி மற்றும் அவரின் மனைவி பிரியா இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது மிகவும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்கள். தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் அட்லி இவர் முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதற்கு முன்பு சங்கர் அவர்களுக்கு அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

பின்பு ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அவர்களை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து இயக்கினார். என்னதான் இவர் மூன்று திரைப்படங்களை இயக்கி வெற்றிக் கொண்டாலும் இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே விமர்சனங்களை சந்தித்தது அதுமட்டுமில்லாமல் அட்லி இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மற்ற திரைப்படங்களின் காப்பி என கடும் விமர்சனம் இருந்தது.

இதற்கு பதில் பதில் அளித்த அட்லி ஸ்வரங்களில் ஏழு இருப்பது போல் கதை ஒன்றுதான் அதனை மாற்றி மாற்றி தான் எடுக்கிறார்கள் அதே போல் தான் நானும் எடுத்தேன் என ஒரேடியாக கூறி விமர்சனத்திற்கு முடிவு கட்டினார். ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அட்லி தற்பொழுது ஷாருக்கான் அவர்களை வைத்த ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அட்லி அவர்கள்  பிரபல சின்னத்திரை நடிகையான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரியா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரைகளும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் கடந்த 2014 ஆம் ஆண்டு அட்லி மற்றும் பிரியா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகு பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார்.

பிரியா அட்லி சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார் அந்த வகையில் இவர் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இருப்பார். இந்த நிலையில் தற்பொழுது அட்லீ அவர்கள் சந்தோஷமான செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அதாவது அட்லீ அவர்கள் தான் அப்பாவாகிய தகவலை தான் பகிர்ந்து இருந்தார் அட்லி மற்றும் பிரியா இருவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள் இந்த நிலையில் தற்பொழுது குழந்தை பிறந்துள்ளதை சந்தோஷத்துடன் அறிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிலையில் தங்களுக்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்ததை ஒரு புகைப்படம் மூலமாக அழகாக அறிவித்துள்ளார்கள் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.