அத்திவரதரை தரிசிக்க வந்த மக்கள்.! உண்டியலில் காணிக்கை மட்டும் இத்தனை கோடியா.! ஒரு ஆச்சரிய தகவல்

0
aththi varathar
aththi varathar

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து நாற்பது வருடங்களுக்கு ஒரு முறைதான் அத்திவரதர் சிலை எடுக்கப்படும், இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

அந்த வகையில் 40 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 1ம் தேதி முதல் அந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அதாவது 48 நாட்கள் தரிசனத்திற்காக வைத்தார்கள், அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்தும் மக்கள் வந்தார்கள், இதுவரை சுமார் ஒரு கோடி பக்தர்கள் வரை தரிசித்தார்கள்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்தி வரதர் உற்சாகத்தில் வைக்கப்பட்ட உண்டியலின் வசூல் தொகை தற்போது வெளியாகியுள்ளது, அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே 18 உண்டியல்கள் வைக்கப்பட்டது இதில் காணிக்கையாக 10 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 129 ரூபாய் செலுத்தியுள்ளார்கள் மக்கள்.

அதுமட்டுமில்லாமல் 125 கிராம் தங்கமும் 5 கிலோ 339 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது இதை இந்து சமய அறநிலை துறையினர் அறிவித்துள்ளார்கள்.