அதர்வாவின் குருதி ஆட்டம் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.! வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அதர்வா, இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்பட வரிசையில்தான் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு ஓரளவு ரசிகர் கூட்டம் உருவானது.

இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது இதனாலேயே இவர் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், மேலும் இவர் 8தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் அதர்வா நடித்து வருகிறார், இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகி வருகின்றன இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார், படத்தை பிரின்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மற்றும் ராக்போர்ட் எண்டர்டயின்மென்ட் சார்பில் முருகானந்தம் இருவரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

kuruthi-attam-atharva

Leave a Comment

Exit mobile version