ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அதர்வாவின் “குருதி ஆட்டம்” – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
kuruthi aatam
kuruthi aatam

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது இருப்பினும் சினிமாவில் திறமையை காட்டினால் மட்டுமே நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியும். அந்த வகையில் முரளியின் மகன் அதர்வா தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசதி வருகிறார்.

இவருக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இவர் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி பாரமாக மாறியதை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன. அதில் அனைத்திலும் தனது திறமையை காட்டினார் அந்த வகையில் ஈட்டி, பரதேசி, 100 போன்ற படங்கள் இவர்களுக்கு வெற்றி படங்கள் தான்.

இப்படி இருந்த நிலையில் தற்போது கூட பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதில் ஒன்றான குருதி ஆட்டம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளிவந்து மக்கள் மத்தியில் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருப்பதால்..

ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குருதி ஆட்டம் திரைப்படத்தில் அதர்வாவுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதா ரவி, பிரகாஷ், ராகவன், வினோத் சாகர் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

இந்த படம் முதல் நாளே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால் அடுத்த நாட்களில் நல்லதொரு வரவேற்பையும் வசூலும் செய்யும்  என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அதர்வாவின் குருதி ஆட்டம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 80 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.