எல்லாத்துக்கும் ஆதார் என்பது அட்ரஸ் ஆனா அது எனக்கு வாழ்க்கை அதிரடி சரவெடியாக வெளியானது அதர்வாவின் அட்ரஸ் டீசர்.!

2010ஆம் ஆண்டு பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முரளியின் மகன் அதர்வா முரளி. அதன்பிறகு 2011ம் ஆண்டு கோ என்ற திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் மேலும் அதர்வா முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை, சண்டிவீரன், ஈட்டி கணிதன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போதை ஆகாதே இமைக்காநொடிகள், பூமரங்  என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது இவர் கையில் குருதியாட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அதர்வாவின் திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம்  இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் இவரின் திரைப்படத்தையும் ரசிகர்கள் காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அதர்வா தற்பொழுது  ராஜ்மோகன் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணாவின் தயாரிப்பில் அட்ரஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் ராஜமோகன் இசக்கி பாரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் தன்னுடைய கிராமத்திற்கு ஒரு அடையாளம் வேண்டும் அட்ரஸ் வேண்டும் என போராடி வருகிறார் அதர்வா இதுதான் படத்தின் கதை என இந்த டீசரின் மூலம் தெரிய வருகிறது.

இதோ அந்த டீசர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment