கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18 /9 என்ற திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இதனைத்தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னலோரம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம், ரசிகர்களிடம் பிரபலமானது. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகளை சரியாக அமையவில்லை.
அதனால் சென்னை-28 இரண்டாம் படத்தில் சொப்பன சுந்தரி என்ற பாடலுக்கு நடனமாடினார், அதன் பின்பு பட வாய்ப்பு அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தங்களது இரண்டாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினார்கள், அப்போது கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
