அடேங்கப்பா ஆண்ட்ரியாவா இது கல்லூரி படிக்கும் பொழுது அவர் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இணையத்தில் கலக்கும் புதிய புகைப்படம் இதோ.!

0

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் புதிதாக உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மங்காத்தா,விஸ்வரூபம்,ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் மேலும் இவர் மாஸ்டர் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

தமிழில் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் தனது குரல் மூலம் பாடல்களையும் பாடியுள்ளார் என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் மேலும் சினிமாவில் ஒரு நடிகை மிகவும் வளர்ந்து வரும் நேரத்தில் பல சர்ச்சைகள் கிளம்பி விடும் அந்த வகையில் ஆண்ட்ரியாவுக்கும் பல சர்ச்சைகள் இருந்தது.

அதை எல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என ஆண்ட்ரியா நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார் மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபொழுது தனது இளமையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

andrea
andrea

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் கல்லூரி படிக்கும் பொழுது தனது தோழிகளுடன் ஆண்ட்ரியா மிகவும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது அவரா எங்களுக்கு ஒண்ணுமே புரியல என பல கேள்விகளை கமெண்ட் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.