31 நாள் முடிவில் கமலின் “விக்ரம் திரைப்படம்” – சென்னை ஏரியாவில் மட்டும் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தை இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் சீன்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்ததால் படத்தை ரசிகர்கள் பலரும் என்ஜாய் செய்து பார்த்து வந்தனர். மேலும் படத்தில் கமலுக்கு நிகராக விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, நரேன் போன்ற பலரும் ஆக்சன் சீன்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் மக்களை கொண்டாட வைத்தது.

இந்த படத்தை கமலின் சொந்த நிறுவனம் தயாரித்துள்ளதால் விக்ரம் படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி பல மடங்கு வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் கமல் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சில படங்களிலும் கமல் கமிட் ஆகியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜயை வைத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க உள்ளார். அதைத்தொடர்ந்து கைதி 2, தெலுங்கில் ஒரு படம் என லோகேஷும் ஒரு பக்கம் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் விக்ரம் திரைப்படம் நான்கு வாரங்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்ற நிலையில் 31 நாட்கள் முடிவில் விக்ரம் திரைப்படம் இதுவரையில் சென்னையில் 17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் தமிழ் சினிமாவிலேயே அதிக லாபத்தை கொடுத்த திரைப்படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது விக்ரம் படம்.

Leave a Comment